ADDED : ஜூலை 20, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாஸ் ஏஞ்சலஸ்:அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று அதிகாலை கேளிக்கை விடுதிகள் அருகே, தாறுமாறாக ஓடிய கார், கூட்டத்திற்குள் புகுந்ததில், 30 பேர் காயமடைந்தனர்; ஐந்து பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணம், ஹாலிவுட் பகுதியில் கேளிக்கை விடுதிகள் செயல்படும் சாண்டா மோனிகா பவுல்வர்டில் நேற்று அதிகாலையில், கார் ஒன்று தாறுமாறாக ஓடி கூட்டத்திற்குள் புகுந்தது.
இது குறித்து லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சலஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.