தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/எகிப்தில் டேங்கர் லாரி வெடித்ததில் 30 பேர் பலி

எகிப்தில் டேங்கர் லாரி வெடித்ததில் 30 பேர் பலி

எகிப்தில் டேங்கர் லாரி வெடித்ததில் 30 பேர் பலி


UPDATED : நவ 26, 2026 01:50 AM

ADDED : நவ 26, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 01:50 AM ADDED : நவ 26, 2026 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெய்ரோ: வட ஆப்ரிக்க நாடான எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே, பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற டேங்கர் லா ரி கவிழ்ந்து வெடித்ததில், 30 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.

எகிப்தில் மூன்று மாகாணங்களை இணைக்கும் சாலையாக கெய்ரோ வெளிவட்டச் சாலை உள்ளது. இங்கு, கிசா மாகாணத்தின் அல்-வார்ராக் பகுதியில், டேங்கர் லாரி ஒன்று பெட்ரோலியப் பொருட்களை நேற்றிரவு ஏற்றி சென்றது.

அப்போது, எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து தீப்பிடித்து வெடித்தது. இந்த தீ, அருகில் சென்ற கார்களுக்கும் பரவியது.

இந்த பெரும் விபத்தில், 30 பேர் பலியாகினர்; 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில், 39 ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us