தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ 15 நாள் போரில் 3,000 பேர் பலி

 15 நாள் போரில் 3,000 பேர் பலி

 15 நாள் போரில் 3,000 பேர் பலி


ADDED : மார் 15, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 3,000ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய போர் நேற்றுடன் 15 நாளை எட்டியுள்ளது. ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஈரானுக்கு ஆதரவாக லெபனானைச் சேர்ந்த ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேலை தாக்கி வருகிறது. மேற்காசியாவில் மாறி மாறி நடத்தப்படும் தாக்குதலில் இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 2,400க்கும் மேற்பட்டோரும், லெபனானில் 773 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் 15 பேரும், ஈராக்கில் 32 பேரும், தாக்குதலை தொடங்கிய அமெரிக்காவில், ராணுவ வீரர்கள் 13 பேரும் உயிரிழந்துள்ளனர்.

குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதியிலும், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us