ADDED : அக் 23, 2025 05:21 AM
நைஜீரியா: அபுஜா: நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 31 பேர் உடல் கருகி பலியாகினர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள நைஜர் மாநிலத்தின் பிடா பகுதியில் டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து பெட்ரோ சிந்தத் துவங்கியது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் லாரியில் இருந்து கொட்டிய பெட்ரோலை பிடிக்கக் குவிந்தனர். அந்த சமயம் திடீரென்று டேங்கர் வெடித்துச் சிதறியது. இதில் 31 பேர் பலியாகினர்; 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடக்கு மற்றும் தெற்கு நைஜீரியா இடையே பொருட்கள் கொண்டு செல்ல முக்கிய போக்குவரத்து நகரமாக நைஜர் மாநிலம் உள்ளது. ஆனால் சமீபத்திய மாதங்களில், அங்கு கனரக லாரி விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மோசமான சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் இல்லாததுமே இதற்கு காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.