"மீண்டும் மோடியே பிரதமர்"; இங்கிலாந்து பத்திரிகை கணிப்பு
"மீண்டும் மோடியே பிரதமர்"; இங்கிலாந்து பத்திரிகை கணிப்பு
ADDED : ஜன 01, 2024 02:32 PM

லண்டன்: '2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவார் மோடி' என இங்கிலாந்தின் பிரபல கார்டியன் பத்திரிகை கணித்துள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: வரவிருக்கும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்களில் அக்கட்சியின் சமீபத்திய வெற்றிகளும், பிரதமர் மோடியின் அபரிமிதமான புகழும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதும் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுக்கும்.
3 மாநிலங்களில் பா.ஜ., பெற்ற வெற்றிகள், பிரதமர் மோடியின் புகழை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. அதேபோல் பிரதமர் மோடியே 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவார் . இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலவரப்படி மோடி மற்றும் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடை க்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 2014ல் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து நாட்டின் வளர்ச்சி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உட்கட்சி பூசல்
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் ஒட்டுமொத்தமாக மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்கள் நிறைந்து காணப்படுகிறது. சமீபத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இன்னும் உட்கட்சி பிரச்னைகள் நிலவுகிறது. இருப்பினும் பா.ஜ., கூட்டாக எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகள் 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' என்ற பெயரில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது .
மோடியின் பங்கு
முக்கியமான மாநிலங்களான பீஹார் மற்றும் மஹாராஷ்டிராவில் கட்சியின் நிலைப்பாடு சரியில்லாத காரணத்தாலும், ஓட்டுக்கள் அதிக அளவு கிடைக்க வாய்ப்பில்லை. சட்டசபை தேர்தலுக்கும் பிரதமருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பா.ஜ., தனது பிரசாரத்தில் மோடியை முன்னிறுத்துகிறது. வாக்காளர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்க பல பேரணிகளில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.
இந்தியாவை உலக வல்லரசாக உயர்த்துவதில் பிரதமர் மோடியின் பங்கு அதிகம் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சந்திரனில் சந்திரயான்-3 கால் பதித்து சாதனை படைத்தது பாராட்டுக்குரியது. லோக்சபா தேர்தலுக்கான வாய்ப்புகள் குறித்து பா.ஜ., மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.