ஒரு கோடி பேர் உயிரை காப்பாற்றினேன்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்
ஒரு கோடி பேர் உயிரை காப்பாற்றினேன்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்
ADDED : டிச 23, 2025 07:09 AM

வாஷிங்டன்: ''நான் இன்னும் தீர்க்காத ஒரே போர் ரஷ்யா-உக்ரைன் போர் மட்டும் தான். இதுவரை 1 கோடி பேர் உயிரை காப்பாற்றி உள்ளேன்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையே பெரும் பகை உள்ளது. நான் 8 போர்களைத் தீர்த்து வைத்திருக்கிறேன். தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான நிலைமை சீரடைந்து வருகிறது.
அது ஏற்கெனவே நல்ல நிலையில் இருப்பதாக நான் நம்புகிறேன். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்படவிருந்த ஒரு அணு ஆயுதப் போரை நாங்கள் தடுத்து நிறுத்தினோம்.
ஒரு கோடி பேர் உயிரை காப்பாற்றினேன். இல்லையெனில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார். 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நான் இன்னும் தீர்க்காத ஒரே போர் ரஷ்யா-உக்ரைன் போர் மட்டும்தான். இவ்வாறு அவர் கூறினார்.

