sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பணம் கேட்டு உலகம் முழுவதும் யாசகம் கேட்பது அவமானமாக இருக்கிறது; பாகிஸ்தான் பிரதமர்

/

பணம் கேட்டு உலகம் முழுவதும் யாசகம் கேட்பது அவமானமாக இருக்கிறது; பாகிஸ்தான் பிரதமர்

பணம் கேட்டு உலகம் முழுவதும் யாசகம் கேட்பது அவமானமாக இருக்கிறது; பாகிஸ்தான் பிரதமர்

பணம் கேட்டு உலகம் முழுவதும் யாசகம் கேட்பது அவமானமாக இருக்கிறது; பாகிஸ்தான் பிரதமர்

20


ADDED : ஜன 31, 2026 07:11 PM

Google News

ADDED : ஜன 31, 2026 07:11 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: உலகம் முழுவதும் பண உதவி கேட்டு யாசகம் கேட்பது ரொம்ப அவமானமாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இஸ்லமாபாத்தில் நேற்றிரவு பாகிஸ்தானின் முன்னணி ஏற்றுமதியாளர்களிடையே உரையாற்றிய போது, இதனை அவர் கூறியுள்ளார். மேலும், அவர் பேசியதாவது; தற்போதைய நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் இதில் நமது நட்பு நாடுகளின் கடன்களும் அடங்கும். கடன் வாங்கச் செல்பவரின் தலை எப்போதும் குனிந்தே இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

நானும், ராணுவ தளபதி ஆசிம் முனீரும் பண உதவி கேட்டு உலகம் முழுவதும் யாசகம் எடுக்கும்போது நாங்கள் வெட்கப்படுகிறோம். கடன் வாங்குவது நமது சுயமரியாதைக்குப் பெரும் சுமையாகும். எங்களது தலைகள் அவமானத்தால் குனிகின்றன. அவர்கள் எங்களைச் செய்யச் சொல்லும் பல விஷயங்களுக்கு எங்களால் மறுப்பு சொல்ல முடியவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விரக்தியில் பேசியுள்ளார்.






      Dinamalar
      Follow us