ADDED : டிச 23, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கின்ஷாசா : காங்கோ நாட்டில் பாயும் புசிரா ஆற்றில் பயணியரை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து, 38 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் அதிகமானோர் மாயமாகினர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள ஈக்குவடார் மாகாணத்தில் புசிரா ஆறு பாய்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இன்சென்டி நகருக்கு வர்த்தகர்கள் உட்பட 150க்கும் அதிகமானோர் படகில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றி சென்றதால், எடை தாங்காமல் திடீரென படகு கவிழ்ந்தது. இதில் 38 பயணியர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
மாயமான நபர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

