இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: இங்கிலாந்து பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: இங்கிலாந்து பேட்டிங்
ADDED : ஜூலை 10, 2025 03:25 PM

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் இன்று துவங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்டில் எழுச்சி பெற்ற இந்திய அணி, 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், இன்று (ஜூலை 10) லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.
'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் ஒரு மாற்றமாக பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் பும்ரா சேர்க்கப்பட்டார்.