ADDED : அக் 07, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோம்: இத்தாலியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, இந்தியர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக நம் துாதரகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் தெற்கே, மடேரா நகரில் உள்ள ஸ்கான்சானோ ஜோனிகோ பகுதியில், காரும் - லாரியும் மோதிய விபத்தில், இந்தியர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக ரோமில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
பலி யானோர் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள துாதரகம், உயிரிழந்தோரின் குடும்பங் களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.