செங்கடலில் கிரேக்க கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதலில் 4 பேர் பலி; 11 பேர் மாயம்
செங்கடலில் கிரேக்க கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதலில் 4 பேர் பலி; 11 பேர் மாயம்
ADDED : ஜூலை 10, 2025 09:36 PM

வாஷிங்டன்: செங்கடலில் கிரேக்க கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கப்பல் தண்ணீரில் மூழ்கியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 11 பேரை தேடும் பணி நடக்கிறது.
செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், கையேறி குண்டுகளை வீசியும், சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவியும் தாக்குதல் நடத்துகின்றனர்.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி பயங்கரவாத படை செயல்படுகிறது. இதனால், இஸ்ரேல்- ஹமாஸ் போர் துவங்கியதில் இருந்து, செங்கடலில் அதிக தாக்குதலை ஹவுதிப்படையினர் நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கடலில் கிரேக்க கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கப்பல் தண்ணீரில் மூழ்கியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 11 பேரை தேடும் பணி நடக்கிறது. தண்ணீரில் தத்தளித்த 10 பேரை இதுவரை மீட்பு படையினர் மீட்டு உள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் எட்டு பிலிப்பைன்ஸ் பணியாளர்கள், ஒரு இந்தியர் மற்றும் ஒரு கிரேக்க பாதுகாப்பு காவலர் அடங்குவர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தொடங்கியதற்கு பிறகு, செங்கடலில் நூற்றுக்கு மேற்பட்ட சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

