sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈராக்கில் அமெரிக்க விமானம் விழுந்து வீரர்கள் 6 பேர் பலி

/

ஈராக்கில் அமெரிக்க விமானம் விழுந்து வீரர்கள் 6 பேர் பலி

ஈராக்கில் அமெரிக்க விமானம் விழுந்து வீரர்கள் 6 பேர் பலி

ஈராக்கில் அமெரிக்க விமானம் விழுந்து வீரர்கள் 6 பேர் பலி

4


UPDATED : மார் 13, 2026 09:51 PM

ADDED : மார் 13, 2026 04:19 PM

Google News

4

UPDATED : மார் 13, 2026 09:51 PM ADDED : மார் 13, 2026 04:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாக்தாத்: ஈராக்கில் அமெரிக்க போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிய விமானம் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் 14வது நாளை எட்டியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போர் நிற்பதற்கான எந்த வழிகளும் தென்படவில்லை.

இந்நிலையில், ஈரானில் தாக்குதல் நடத்தும் போர் விமானத்துக்கு நடுவானில், கேசி-135 ரக விமானமானது எரிபொருள் நிரப்பியது. அடுத்த சில நொடிகளில், கேசி 135 விமானம் தொடர்பை இழந்தது. அந்த விமானத்தில் 6 பேர் இருந்தனர். உடனடியாக தேடும் பணி நடந்த நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மீட்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்தனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் இந்த விமானத்தை யாரும் சுட்டு வீழ்த்தவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. எரிபொருள் நிரப்பப்பட்ட போர் விமானம் பத்திரமாக குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கியது.

ஈரான் மீதான போரில் இதுவரை அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 13 ஐ கடந்துள்ளது.






      Dinamalar
      Follow us