தென் ஆப்ரிக்காவில் 'சுன்னத்' சடங்கில் 41 இளைஞர்கள் பலி
தென் ஆப்ரிக்காவில் 'சுன்னத்' சடங்கில் 41 இளைஞர்கள் பலி
ADDED : ஜன 01, 2026 03:17 AM
கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவில் நடந்த பாரம்பரிய 'சுன்னத்' சடங்கில் 41 இளைஞர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் ஆண்மை துவக்க விழா என்ற பெயரில், ஆண்டுதோறும் ஜூன் - ஜூலை மற்றும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் 'சுன்னத்' என்ற மதச் சடங்கு விழா நடத்தப்படுகிறது. ஆணுறுப்பின் முன் தோலை நீக்குவதே, சுன்னத் என்றழைக்கப்படுகிறது. இதற்காக இளைஞர்களை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்துகின்றனர்.
பின்னர், மயக்க மருந்து தராமல், 'சுன்னத்' சடங்கு நிறைவேற்றப்படுகிறது. சில காலம் வரை வனப்பகுதியிலேயே இளைஞர்களை தங்க வைத்து, சமூக பொறுப்பு, பாரம்பரியம் ஆகியவற்றை கற்று தருகின்றனர். அப்படி சமீபத்தில் சுன்னத் சடங்குக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களில், 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் கிழக்கு கேப் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது-.
மயக்க மருந்து தராமல், சுகாதார மற்ற முறையில் செய்யப்பட்ட சுன்னத் சடங்கால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

