sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானில் ஏழைகள் 10 கோடி பேர்

/

பாகிஸ்தானில் ஏழைகள் 10 கோடி பேர்

பாகிஸ்தானில் ஏழைகள் 10 கோடி பேர்

பாகிஸ்தானில் ஏழைகள் 10 கோடி பேர்

12


UPDATED : ஜூன் 06, 2025 01:42 PM

ADDED : ஜூன் 06, 2025 10:48 AM

Google News

UPDATED : ஜூன் 06, 2025 01:42 PM ADDED : ஜூன் 06, 2025 10:48 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 44.7 சதவீதம் பேர் வசிப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு விவர அறிக்கையில் கூறியுள்ளது.

உலக அளவில் உயர்ந்து வரும் விலைவாசி மற்றும் புதிதாக திரட்டியுள்ள தரவுகளின் படி வழக்கமான உலகளாவிய திருத்த பகுதியாக, உலக வங்கி அதன் சர்வதேச வறுமைக் கோடு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச வறுமைக் கோடுகளுக்கான இந்த திருத்தங்கள், சர்வதேச அளவில் ஒரு ஒப்பீட்டுத் திரட்டுதலின் அடிப்படையில், வாங்கும் சக்தி நிலை (poverty lines are based on 2021 purchasing power parity)யை அடிப்படையாகக் கொண்டவை. வறுமை தொடர்பான தகவல்களை இந்த உலக வங்கி மிக துல்லியமாக கணிப்பதாகவும் ஒரு பத்திரிகை பாராட்டி உள்ளது.

உலகளாவிய சூழலில் பாகிஸ்தானின் வறுமை நிலைகளை தெளிவுப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும் , பாகிஸ்தானியர்களின் வறுமை பாதிப்பைக் குறைப்பதற்கும், மீண்டு வருவதற்கான யோசனைகளின் முயற்சிகளும் தொடரும் என உலக வங்கியின் பாகிஸ்தான் நாட்டிற்கான இயக்குநர் நஜய்பென்ஹாசீன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் நாள் ஒன்றுக்கு ரூ.350 முதல் 361 வரை குறைந்த சம்பளம் வாங்குகின்றனர். இவர்கள் வறுமைக்கோடிற்கு கீழ் வாழும் நிலையாக பிரிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 44. 7 சதவீதம் பேர் (10 கோடி பேர்) இந்த நிலைக்குள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் என்பதிலும் தாழ்வாக நாள் ஒன்றுக்கு ரூ.258 சம்பளம் வாங்குவோர் உள்ளதாகவும், இவர்கள் தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ. 688 வீதம் சராசரியாக சம்பளம் வாங்குவோர் உயர்ந்த மற்றும் நடுத்தர வர்க்கமாக பிரிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us