தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/4வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியா - 71/ 3

4வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியா - 71/ 3

4வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியா - 71/ 3


UPDATED : ஜூலை 09, 2026 10:52 PM

ADDED : ஜூலை 09, 2026 09:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 10:52 PM ADDED : ஜூலை 09, 2026 09:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி 20 போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. நாட்டிங்காமில் நடந்த 3வது போட்டியில், முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து 201/7 ரன் குவித்தது. சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி 11.4 ஓவரில் 76 ரன்னுக்கு சுருண்டு, 125 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இவ்விரு அணிகள் மோதும் 4வது போட்டி பிரிஸ்டலில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கி உள்ள இந்திய அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன் எடுத்துள்ளது. துவக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி 15, அபிசேக் சர்மா 16, இஷான் கிஷன் 4 ரன்னில் அவுட்டாகினர்.

இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். ஒருவேளை தோல்வியடைந்தால், தொடரை இழந்துவிடும்.

இந்திய அணி விவரம்


அபிசேக் ஷர்மா

வைபவ் சூர்யவன்ஷி

இஷான் கிஷன்

ஸ்ரேயாஸ் ஐயர்

திலக் வர்மா

ஷிவம் துபே

வாஷிங்டன் சுந்தர்

அக்சர் படேல்

பிரின்ஸ் யாதவ்

அர்ஷ்தீப் சிங்

பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து அணி


பில் சால்ட்

ஜோஸ் பட்லர்

ஹாரி புரூக்

ஜேக்கப் பெத்தெல்

டாம் பன்டன்

சாம் கர்ரன்

வில் ஜாக்ஸ்

ரேகன் அகமது

ஜோப்ரா ஆர்ச்சர்

அடில் ரஷீத்

ஜோஸ் டங்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us