பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 5 பேர் பரிதாப பலி; 32 பேர் படுகாயம்!
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 5 பேர் பரிதாப பலி; 32 பேர் படுகாயம்!
ADDED : ஜன 05, 2025 06:57 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 32 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாகிஸ்தானின் தெற்மேற்கு நகரமான துர்பத்தில், பஸ் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த, மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலூச் விடுதலை சிறுத்தை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், 'அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் மனிதர்கள் என்று அழைப்பதற்கு தகுதியற்றவர்கள்' என கூறியுள்ளார்.