காங்கோ ஐ.எஸ்., ஆதரவு குழுவினர் தாக்குதலில் 52 பேர் பலி
காங்கோ ஐ.எஸ்., ஆதரவு குழுவினர் தாக்குதலில் 52 பேர் பலி
ADDED : ஆக 20, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கின்ஷாஷா:மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுக்களான
ஏ.டி.எப்., எனப்படும் கூட்டணி ஜனநாயக படைக்கும், ருவாண்டா ஆதரவு படைக்கும் இடையே கடுமையான மோதல் நடந்துவருகிறது.
இதில் ஏ.டி.எப்., அமைப்புக்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதரவு உள்ளது. இவர்கள், வடக்கு கிவு மாகாணத்தில் ஆகஸ்ட் 9 முதல் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதில், 52 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காங்கோவில் உள்ள ஐ.நா., அமைதிக்குழு தெரிவித்துள்ளது.