ஆப்கானிஸ்தானில் சோகம்! இருவேறு சாலை விபத்தில் 52 பேர் பரிதாப பலி
ஆப்கானிஸ்தானில் சோகம்! இருவேறு சாலை விபத்தில் 52 பேர் பரிதாப பலி
ADDED : டிச 20, 2024 07:59 AM

காபூல்: தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் மொத்தம் 52 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் கசினி மாகாணத்திலுள்ள ஷாபாஸ் கிராமத்தின் அருகே நெடுஞ்சாலையில் நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. அதேபோல், கிழக்கு மாவட்டமான அண்டாரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து மீட்புப்படையினர் விபத்து நடந்த இடத்தில் தீவிரமாக மீட்பு பணி மேற்கொண்டனர். இருவேறு சாலை விபத்துகளில் மொத்தம் 52 பேர் உயிரிழந்தனர். மேலும் 65 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
டிரைவரின் அலட்சியப்போக்கினாலும் முறையான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினாலும், அந்நாட்டில் விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணத்தில் பஸ் ஒன்று எரிபொருள் ஏற்றி வந்த லாரியின் மீது மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.