ஆஸி.,யில் 5வது டெஸ்ட்: இந்திய அணி 185 ரன்னுக்கு ஆல் அவுட்
ஆஸி.,யில் 5வது டெஸ்ட்: இந்திய அணி 185 ரன்னுக்கு ஆல் அவுட்
ADDED : ஜன 03, 2025 12:47 PM

சிட்னி: சிட்னியில் நடக்கும் ஆஸி., அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினர், முதல் இன்னிங்ஸில் 185 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகினர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் இந்தியா வென்றது. அடிலெய்டு, மெல்போர்னில் தோற்க (பிரிஸ்பேன் டெஸ்ட் 'டிரா') தொடரில் 1-2 என பின்தங்கியுள்ளது; ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று (ஜன.,03) சிட்னியில் துவங்கியது.
மோசமான 'பார்ம்' காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். 'டாஸ்'வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆஸி., வீரர்களின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிக்கொடுத்தனர்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 72.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்மாக ரிஷப் பன்ட்- 40, ரவீந்திர ஜடேஜா- 26 ரன் எடுத்து அணிக்கு உதவினர்.
அடுத்து களமிறங்கிய ஆஸி., அணியின் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா (2) ரன்னில் பும்ரா பந்தில் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., அணி 3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்துள்ளது.