ADDED : ஜன 08, 2024 04:42 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி செலுத்தச் சென்ற மருத்துவக்குழுவுக்கு பாதுகாப்பு அளித்த 6 போலீசார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் போலியோ தடுப்பூசி செலுத்துவதற்காக அப்பகுதிக்கு மருத்துவக்குழு ஒன்று சென்றது. அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக போலீஸ் குழு ஒன்றும் சென்றுள்ளது. இந்நிலையில் போலீசாரை குறிவைத்து மர்மநபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த குண்டு வெடிப்பில் 6 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு குழுவோ அல்லது தனிநபரோ பொறுப்பு ஏற்கவில்லை.