உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 15, 2026 02:14 AM
அ நிறம் | அளவு
வாஷிங்டன்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் கெனோஷாவில் இருந்து மெனோமேனிக்கு ஆறு இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பிரபல சுற்றுலா தலமான விஸ்கான்சின் டெல்ஸ் அருகில் உள்ள மிரர் லேக் ஸ்டேட் பார்க் அருகில் உள்ள வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்து சேருவதாகவும், இதனால் விமானத்தை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும் தகவல் அளித்ததையடுத்து, விமானத்தை தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், விமானத்தை தரையிறக்க முற்பட்டபோது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இவ்விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
