கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விழுந்ததில் 60 மாடுகள் பலி
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விழுந்ததில் 60 மாடுகள் பலி
UPDATED : அக் 19, 2026 08:57 PM
ADDED : அக் 19, 2026 05:47 PM
கான்சாஸ் சிட்டி: அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் கான்சாஸ் நகர் அருகே, பாலத்தில் சென்று கொண்டிருந்த, மாடுகள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்து கீழே இருந்த காரின் மீது விழுந்தது. இந்த விபத்தில், 60 மாடுகள் உயிரிழந்தன.
கான்சாஸ் நகர் அருகே, 130 மாடுகளுடன் கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்த பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த காரின் மீது அது விழுந்தது.
இந்த விபத்தில், லாரியில் இருந்த 60 மாடுகள் உயிரிழந்தன. கன்டெய்னர் லாரி மற்றும் கார் டிரைவர்கள் சிறிய காயங்களுடன் தப்பினர்.
மற்ற மாடுகள் அந்தப் பகுதியில் தெரித்து ஓடின. இதனால், அந்த சாலையில், பல சிறு விபத்துகள் ஏற்பட்டன. இதற்கிடையே தப்பியோடிய மாடுகள் பிடிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
