ADDED : நவ 04, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரஷ்யா: மாஸ்கோ: ரஷ்யாவில், 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சட்கா தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் 24 கி.மீ.,ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம், பசிபிக் பெரும்பகுதியைச் சுற்றியுள்ள நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம் போன்றவை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

