ADDED : செப் 02, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிகாகோ:அமெரிக்காவில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தின்போது, சிகாகோவில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஏழு பேர் பலியாகினர்; 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தொழிலாளர் தினமான, செப்.,1ம் தேதி மற்றும் வார விடுமுறையை ஒட்டி, நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளும், பேரணிகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரின் பல்வேறு பகுதிகளில், 72 மணி நேரத்தில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன.
இதில், 54 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர்; அதில் சிறுமி, இளம்பெண் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.