ADDED : நவ 16, 2025 11:19 PM
கராச்சி: பாகி: ஸ்தானில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஏழு பேர் பலியாகினர்.: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் லதிபாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலையில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர் என, போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் ஒரு பகுதி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மேல் விழுந்ததில், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இவ்விபத்தில் காயமடைந்த ஆறு பேரில் மூன்று பேர் 98 சதவீத தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதால், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மீட்பு நடவடிக்கை முடிந்த பின்னரே வெடி விபத்துக்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது. பட்டாசு ஆலையின் உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாகவும், தொழிற்சாலையின் உரிமத்தின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

