sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

7 வீரர்கள் டக் அவுட்; வெறும் 27 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

/

7 வீரர்கள் டக் அவுட்; வெறும் 27 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

7 வீரர்கள் டக் அவுட்; வெறும் 27 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

7 வீரர்கள் டக் அவுட்; வெறும் 27 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

4


ADDED : ஜூலை 15, 2025 07:31 AM

Google News

4

ADDED : ஜூலை 15, 2025 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிங்ஸ்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் 27 ரன்களுக்கு சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமான சாதனை படைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி, கிங்ஸ்டனில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, 2ம் நாள் முடிவில் 99/6 ரன் எடுத்திருந்தது. 3வது நாளில் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 121 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக கிரீன் 42 ரன் எடுத்தார். அல்சாரி ஜோசப் 5, சமர் ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தினர்.

சற்று கடின இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. ஜஸ்டின் கிரேவ்ஸ் (11 ரன்) மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தார். 7 வீரர்கள் டக் அவுட் ஆகினர். 14.3 ஓவர்களுக்கு, வெறும் 27 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 176 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.

மோசமான சாதனை:


* டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இது 2வது குறைந்தபட்ச ரன்.

* ஆஸ்திரேலிய வீரர் போலன்ட் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

* 100வது டெஸ்ட்டில் விளையாடிய ஸ்டார்க், 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.






      Dinamalar
      Follow us