'ஸ்விங் ஸ்டேட்ஸ்'- 7 மாகாணங்களிலும் வெற்றி பெற்றார் டிரம்ப்!
'ஸ்விங் ஸ்டேட்ஸ்'- 7 மாகாணங்களிலும் வெற்றி பெற்றார் டிரம்ப்!
UPDATED : நவ 06, 2024 01:12 PM
ADDED : நவ 06, 2024 06:55 AM
முழு விபரம்

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் 50 மாகாணங்களில், 'ஸ்விங் ஸ்டேட்ஸ்' என்றழைக்கப்படும், 7 மாகாணங்களிலும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 60, போட்டியிட்டனர். மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 'ஸ்விங் ஸ்டேட்ஸ்' என்றழைக்கப்படும் மாறி மாறி முடிவு வரக்கூடிய மாகாணங்களாக ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் வெற்றி பெறுபவருக்கே அதிபராகும் வாய்ப்பு பிரகாசம் என்பது கணக்கு. அந்த மாகாணங்கள் அனைத்திலும் டிரம்ப் கூடுதல் ஓட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
1. ஜார்ஜியா- டொனால்டு டிரம்ப் 50.8 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
2. வடக்கு கரோலினா- டொனால்டு டிரம்ப் 51 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
3. பென்சில்வேனியா - டொனால்டு டிரம்ப் 51 சதவீதத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
4. அரிசோனா- டொனால்டு டிரம்ப் 51 சதவீதத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
5. மிச்சிகன்- டொனால்டு டிரம்ப் 53 சதவீதத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
6. நெவாடா- டொனால்டு டிரம்ப் 52 சதவீதத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
7. விஸ்கான்சின்- டொனால்டு டிரம்ப் 52 சதவீதத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர் அதிபர் ஆவார். மாகாணங்கள் வாரியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
எலக்டோரல் ஓட்டு முன்னிலை நிலவரம்!
டொனால்டு டிரம்ப்- 277
கமலா ஹாரிஸ்- 226
அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார்.

