காஸா போரில் உயிரிழப்பு; ஐ.நா., அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
காஸா போரில் உயிரிழப்பு; ஐ.நா., அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
ADDED : நவ 09, 2024 08:54 AM

ஜெனீவா: காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள் என ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் இன்னமும் ஓயவில்லை. எங்கு நோக்கிலும் குண்டு சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்க, போரின் விளைவுகள் குறித்து உலக நாடுகள் அதீத கவலை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 43,058 ஆக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. 1,02, 684 பாலஸ்தீன மக்கள் காயம் அடைந்துள்ளனர். போரில் கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது;
காஸாவில் அரங்கேறி வரும் தாக்குதல் மனிதநேயத்தை மீறிய நடவடிக்கை. கொல்லப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குடியிருப்புகளில், வீடுகளில் வசித்து வந்தவர்கள்.
இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.