ADDED : ஏப் 02, 2026 05:56 PM
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில், 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் வடக்கு மொலுகா கடலில் நேற்று காலை, 7.6 ரிக்கர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இதன் பலத்த அதிர்வுகள் அந்நாட்டின் கிழக்கு பகுதி வரை உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது அப்பிராந்தியம் முழுதும் பெரும் பீதியையும், ஒரு குறுகிய கால சுனாமி எச்சரிக்கையையும் ஏற்படுத்தியது.
பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த நிலநடுகத்தால் அங்குள்ள பல கட்டடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார்.
சேதத்தின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், பின் அதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதால், தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என இந்தோனேஷிய தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
