உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 03, 2026 07:06 AM

அ நிறம் | அளவு
ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் வடக்கு மொலுகா கடலில் நேற்று காலை, 7.6 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது, அப்பிராந்தியம் முழுதும் பெரும் பீதியையும், சுனாமி எச்சரிக்கையையும் ஏற்படுத்தியது.
பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள பல கட்டடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார்.
