சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்: 8 பேர் பரிதாப பலி; வாலிபர் வெறிச்செயல்
சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்: 8 பேர் பரிதாப பலி; வாலிபர் வெறிச்செயல்
UPDATED : நவ 17, 2024 06:37 AM
ADDED : நவ 17, 2024 06:35 AM

பீஜிங்: சீனாவில் 21 வயது மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வுக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் 21 வயது வாலிபர் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இதில், 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டனர். சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த நவ.,12ம் தேதி சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.