அமெரிக்கா தாக்குதலில் 3 கப்பல்களில் இருந்த 8 பேர் பலி
அமெரிக்கா தாக்குதலில் 3 கப்பல்களில் இருந்த 8 பேர் பலி
ADDED : டிச 17, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கராகஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து, கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
இதையடுத்து 'ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர்' என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல் ஒழிப்பு நடவடிக்கையை துவங்க உத்தரவிட்டார். அதன்படி, பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய கப்பல்கள் மீது, அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், 25க்கும் மேற்பட்ட கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில், 95 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெனிசுலா அருகே மூன்று படகுகளை தாக்கியதாகவும், அதில், எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், அமெரிக்கா கூறியுள்ளது.

