அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கொலை வெறி தாக்குதல்
அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கொலை வெறி தாக்குதல்
ADDED : பிப் 06, 2024 10:53 PM

சிகாகோ: அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கொலை செய்பயபட்டு வரும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் இன்று இந்திய மாணவர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் சிகாகோவில் நடந்துள்ளது.
ஆந்திராவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி, வெஸ்லியான் பல்கலை.யில் படித்து வருகிறார். குடும்பத்துடன் சிகாகோவில் தங்கியுள்ளார்.சம்பவத்தன்று சையத் மசாஹிர் அலி வீட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சையத் மசாஹிர் அலியை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து பணம், மற்றும் மொபைல் போனை பறித்துச் இதில் மாணவருக்கு பல இடங்களில் வெட்டுக்காயங்கள் விழுந்தன. ரத்த காயங்களுடன் மாணவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடரும் சோகம்
இதற்கு முன் ...
1) அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் சின்சினதியில் பல்கலைக்கழக மாணவரும் இந்தியாவை சேர்ந்த ஷ்ரேயாஸ் ரெட்டி பினிகர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
2) அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக இந்திய மாணவரான நீல் ஆச்சாரியா மர்மமான முறையில் உயிரிழந்தார்.
3) அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த இந்திய மாணவர் விவேக் சைனி (25) சுத்தியலால் அடித்துக்கொல்லப்பட்டார்.
4) அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த இந்திய மாணவர் அகுல் தவான் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று சிகாகோ நகரில் இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. இதில் உயிர் தப்பியுள்ளார்.
உயிர் பயத்தில் சக இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் இதுவரை இந்திய மாணவர்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத நிலையில் சிகாகோவில் சையத் மசாஹிர் அலி என்ற மாணவர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. இதன் மூலம் இந்திய மாணவர்கள் உயிர் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்சங்கருக்கு கடிதம்
இன்று சிகாகோ மாணவர் மீதான கொலை வெறி தாக்குதல் சம்பவத்தையடுத்து மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாணவனின் குடும்பத்தினர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

