பிரிட்டன் பொதுத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் தமிழர்
பிரிட்டன் பொதுத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் தமிழர்
ADDED : ஜூன் 25, 2024 04:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: பிரிட்டன் பொதுத் தேர்தலில், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார்.
650 தொகுதிகள் கொண்ட பிரிட்டன் பார்லிமென்டிற்கு வரும் ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் ஆட்சியை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அங்கு பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் போட்டியிடுகிறார். இங்கு தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களை சந்தித்து ஆனந்த் குமார் சுந்தர் ஆதரவு திரட்டி வருகிறார். இவர், சென்னை கொளத்தூரை பூர்விகமாக கொண்டவர்..