இந்தியரால் ஏற்பட்ட விபத்து; லாரி டிரைவர்களுக்கான விசாவை நிறுத்தி வைத்தது அமெரிக்கா
இந்தியரால் ஏற்பட்ட விபத்து; லாரி டிரைவர்களுக்கான விசாவை நிறுத்தி வைத்தது அமெரிக்கா
ADDED : ஆக 22, 2025 07:46 AM

வாஷிங்டன்: லாரி டிரைவர் வேலைக்காக வழங்கப்பட்ட விசாக்களை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்திய டிரைவர் ஒருவர் ஏற்படுத்திய விபத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி புளோரிடாவில் செயின்ட் லூசி கவுன்டி பகுதியில் விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலையில் லாரியை திருப்பியுள்ளார். இதனால், வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்தது இந்தியர் ஹர்ஜிந்தர் சிங் என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 2018ம் ஆண்டு மெக்சிகோவில் இருந்து எல்லையை தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார். கலிபோர்னியாவில் வர்த்தக லாரி டிரைவருக்கான உரிமத்தை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், வர்த்தக ரீதியிலான லாரி டிரைவர்களுக்கு வழங்கப்பட்ட பணி விசாவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; வர்த்தக ரீதியிலான லாரி டிரைவர்களுக்கு வழங்கப்பட்ட பணி விசா நிறுத்தி வைக்கப்படுகிறது. அமெரிக்க சாலைகளில் லாரிகளை இயக்கும் வெளிநாட்டு டிரைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அமெரிக்கர்களின் உயிர்களைப் பாதிக்கிறது. மேலும், அமெரிக்க லாரி டிரைவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கச் செய்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.