உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 12, 2026 01:52 AM
அ நிறம் | அளவு
தாய்லாந்தில் விபத்து ஏர் இந்தியா விமான சக்கரம் கழன்றது
புக்கெட்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் இருந்து தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு, நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது.
'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானமான இதில், 150க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். புக்கெட் விமான நிலையத்தின் ஒன்பதாவது ஓடுபாதையில் தரையிறங்க அனுமதி அளித்திருந்தனர்.
அங்கு விமானம் தரையிறங்கிய போது, முன்பக்க சக்கரங்கள் ஓடுபாதையை தொட்டவுடன் கழன்று ஓடின.
பல அடி துாரம் விமானம் உரசிக்கொண்டு புழுதியை கிளப்பியபடி சென்று நின்றது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
