அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்லுங்க: அமித்ஷா பேச்சுக்கு வங்கதேசம் எதிர்ப்பு
அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்லுங்க: அமித்ஷா பேச்சுக்கு வங்கதேசம் எதிர்ப்பு
UPDATED : செப் 24, 2024 05:15 PM
ADDED : செப் 24, 2024 03:09 PM

டாக்கா: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் ஊடுருவுகிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு வங்கதேச அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த 20ம் தேதி ஜார்கண்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் மாநிலத்திற்குள் ஊடுருவுகின்றனர். இங்கு பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ரோஹிங்கியா மற்றும் வங்கதேசத்தவர்களின் ஊடுருவலில் இருந்து மாநிலத்தை விடுவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு வங்கதேசத்திற்கான இந்திய துணைத்தூதரை வரவழைத்து அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
அப்போது அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: இந்த பேச்சு கடும் அதிருப்தி அளிக்கிறது. இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும்.
பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு, அண்டை நாட்டின் குடிமக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது என்பது, இரு நாடுகளுக்கு இடையயான நட்புறவை பாதிக்கும். இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

