கனடா போராட்டம் தொடர்பான பேச்சுக்கு விமான ஊழியர்கள் தயார்
கனடா போராட்டம் தொடர்பான பேச்சுக்கு விமான ஊழியர்கள் தயார்
ADDED : ஆக 20, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டொரன்டோ:கனடாவில் விமான ஊழியர்களின் வேலை நிறுத்தம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், பேச்சு நடத்த ஊழியர் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
வட அமெ ரிக்கா நாடான கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனம், ஏர்- - கனடா. இந்நிறுவனம் தினமும், 700 விமானங்களை இயக்குகிறது. 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணியர் இதை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், ஊதிய உயர்வு கோரிக்கையுடன் விமான ஊழியர்கள் சங்கம் கடந்த 16ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பிரச்னைக்கு தீர்வு காண, பேச்சு நடத்த ஊழியர் சங்கம் முன்வந்துள்ளது.

