உல்லாச கப்பலில் அமேசான் நிறுவனருக்கு திருமணம்; யார் யாருக்கு அழைப்பு தெரியுமா?
உல்லாச கப்பலில் அமேசான் நிறுவனருக்கு திருமணம்; யார் யாருக்கு அழைப்பு தெரியுமா?
ADDED : மார் 30, 2025 03:18 PM

வாஷிங்டன்: அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் மற்றும் அவரது வருங்கால மனைவி லாரன் சான்செஸின் திருமணம், ஜூன் 24 முதல் 26ம் தேதி வரை உல்லாச கப்பலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனரும், உலகப் பணக்காரர்களின் ஒருவருமான ஜெப் பீசோஸ், 61, அவரது அவரது காதலி லாரன் சான்ச்சேஸ், 55, திருமண விழா ஜூன் 26 முதல் 29 தேதி வரை நடைபெற உள்ளது.
திருமணம், இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் ஒரு சொகுசு கப்பலில் நடத்த திட்டமிட்டபட்டுள்ளது.
திருமணத்துக்கு வி.ஐ.பி.,க்கள் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர், கிரிஸ் ஜென்னர், கிம் கர்தஷியான், இவா லாங்கோரியா உள்ளிட்ட பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதேநேரத்தில் பிரபலங்களின் வருகை குடிமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எந்த இடையூறும் இருக்காது என வெனிஸ் நகர மேயர் லூய்கி ப்ருக்னாரோ கூறியுள்ளார்.
யார் இந்த ஜெப் பீசோஸ்?
* அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பீசோஸ், 61, உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் இருப்பவர்.
* பீசோஸ், ஏற்கனவே மெக்கன்ஸி ஸகாட் உடன் திருமணமாகி 25 ஆண்டுகள் குடும்பம் நடத்தியவர். நான்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
* அமேசான் மட்டுமின்றி, விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் புளூ ஆர்ஜின், அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட், ஐ.எம்.டி.பி., என்பன உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
* 2019ம் ஆண்டிலேயே லாரனுடன் காதலில் இருப்பதாக ஜெப் பீசோஸ் கூறினார்.