sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 மூன்றாவது குழந்தைக்கும் ஹிந்து பெயர் சூட்டினார் அமெரிக்க தொழிலதிபர்

/

 மூன்றாவது குழந்தைக்கும் ஹிந்து பெயர் சூட்டினார் அமெரிக்க தொழிலதிபர்

 மூன்றாவது குழந்தைக்கும் ஹிந்து பெயர் சூட்டினார் அமெரிக்க தொழிலதிபர்

 மூன்றாவது குழந்தைக்கும் ஹிந்து பெயர் சூட்டினார் அமெரிக்க தொழிலதிபர்

11


ADDED : பிப் 06, 2026 01:09 AM

Google News

11

ADDED : பிப் 06, 2026 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட உள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி, 40, என்பவருக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். இளம் வயதிலேயே, தன் முயற்சிகளால் பல தொழில்களை துவங்கி வெற்றி கண்டவர்.

தீவிர அரசியல் ஆர்வம் உள்ள அவர், குடியரசு கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளராக உள்ளார். கடந்த, 2024ல் நடந்த அதிபர் தேர்தலின்போது, குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் களமிறங்கினார். பின்னர் போட்டியில் இருந்து விலகி, டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார்.

டிரம்ப் நிர்வாகத்தில், சிறந்த அரசு நிர்வாகத்துக்கான துறை என்ற அமைப்பில் விவேக் ராமசாமி இடம்பெற்றிருந்தார். ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு விரைவில் நடக்க உள்ள தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், விவேக் ராமசாமி, டாக்டரான அவரது மனைவி அபூர்வா தம்பதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு, சாவித்ரி என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே கார்த்திக், 6, அர்ஜுன், 4, என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஹிந்து மதத்தை தீவிரமாக பின்பற்றும் விவேக் ராமசாமி, தன் மூன்று குழந்தைகளுக்கும் ஹிந்து பெயர் வைத்துள்ளதற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us