அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அமெரிக்காவில் விளம்பர பலகைகள்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அமெரிக்காவில் விளம்பர பலகைகள்
ADDED : ஜன 13, 2024 09:13 AM

வாஷிங்டன்: வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவில் வாழும் ஹிந்துக்களும் மகிழ்வான நாளை எதிர்நோக்கி கொண்டாட துவங்கி உள்ளனர்.
கும்பாபிஷேகத்திற்காக வெளிநாடுகளில் இருந்து நிதியும், அலங்கார பொருட்களும் வந்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவில் வரும் 15ம் தேதி முதல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 22ம் தேதி கும்பாபிஷேக விளம்பரங்கள் ராமர் படத்துடன் அமெரிக்காவின் நகரங்களை அலங்கரிக்க துவங்கி இருக்கிறது.
நியூயார்க், டெக்சாஸ், இலினாய்ஸ், நியூஜெர்சி, ஜார்ஜியா, அரிசோனா, மிசெளரி உள்ளிட்ட 10 மாகாணங்களில இந்த விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது.
' இது ஒரு மகிழ்ச்சியான தருணம், வாழ்நாளில் ஒருமுறை தான் இது போன்ற பாக்கியம் கிட்டும், இதனை அமெரிக்க வாழ் இந்தியர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் ' என்றார் அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் பொது செயலர் அமிதாப் மிட்டல்.