ADDED : மே 13, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது, 'தற்காப்பு காப்பீடு' செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு, கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல், வாகனங்களை கொண்டு மோதுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. இதையடுத்து, காப்பீடு நிறுவனங்களின் புதிய திட்டத்தால், தற்காப்பு காப்பீடு பாலிசியை தற்போது ஏராளமானோர் வாங்கி வருகின்றனர்.
இதுவரை, 20 லட்சம் தனிநபர்கள் இந்த காப்பீட்டில் சேர்ந்துள்ளனர். எனினும், இந்த கொலை காப்பீடு பாலிசியால், குற்றங்கள் அதிகரிக்கும் என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.