ADDED : அக் 24, 2025 12:47 AM
நியூயார்க்: உலகின் மிகப்பெரிய பொரு ளாதார நாடான அமெரிக்காவின் தேசியக் கடன் 3,339 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும், 1 கோடி ரூபாய் கடன் உள்ளது.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில் அந்நாட்டின் தேசியக் கடனும் வரலாறு காணாத அளவில் உயர்ந்திருப்பது தெரி ய வந்துள்ளது .
அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டின் தேசியக் கடன் 3,339 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும், 1 கோடி ரூபாய் கடன் உள்ளது.
கடந்த 2024 நவம்பரில் நாட்டின் மொத்தக் கடன் தொகை, 3,163 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3,250 லட்சம் கோடி ரூபாயாக உ யர்ந்தது.
இரண்டே மாதங்களில், ஒரு டிரில்லியன் டாலர், அதாவது 88 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜன.,ல் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு கடன் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கடன் தொகை சீனா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய பெரிய நாடுக ளின் பொருளாதாரங்களுக்கு சமமாகும்.
அ ரசின் செலவீனங்களுக்கும், வருவாய்க்கும் இடையிலான இடைவெளி வேகமாக அதிக ரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் டிரம்பின் ' ஒன் பிக் பியூட்டிபுல் பில்' சட்டப்படி அதிகளவு வரிக் குறைப்பு செய்ததும் காரணம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார ஆலோசனை அலுவலக கணிப்பின்படி, 2047ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்தக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 200 சதவீதத்தை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது.

