ADDED : மே 15, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டாவா: வட அமெரிக்க நாடான கனடாவில், சமீபத்தில் பார்லி., தேர்தல் நடந்தது. இதில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. தொடர்ந்து, அமைச்சரவையை பிரதமர் மார்க் கார்னி மாற்றி அமைத்தார்.
வெளியுறவு அமைச்சராக இருந்த மெலினி ஜோலிக்கு பதில், ராணுவ அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்தை நியமித்தார்.
இந்நிலையில், கனடா அமைச்சரவை நேற்று பதவியேற்றது. பகவத் கீதை மீது உறுதிமொழி ஏற்று, வெளியுறவு அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றார்.