ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: டிரம்ப் - நெதன்யாகு வாக்குவாதம்
ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: டிரம்ப் - நெதன்யாகு வாக்குவாதம்
ADDED : நவ 12, 2026 09:58 PM

- சிறப்பு நிருபர்-
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரியில் தாக்குதல் நடத்தியது. போரை முடிவுக்கு கொண்டு வர கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி செய்தது. ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. தற்காலிகமாக போர் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அதிபர் டிரம்ப்பை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஈரான் மீது மீண்டும் தாக்குதலை துவக்க வேண்டும் என நெதன்யாகு வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், தாக்குதலை மீண்டும் துவக்க டிரம்ப் மறுத்துவிட்டார். இதனால், இரு தலைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செ ய்தி வெ ளியிட்டன.
ஆனால், அவை முற்றிலும் போலியானது என இஸ்ரேல் அரசு மறுத்தது.இரு தலைவர்களுக்கு இடையே ஆலோசனை நடந்ததை உறுதி செய்த இஸ்ரேல் உயர் அதிகாரி ஒருவர், என்ன பேசினார்கள் என்பதை கூற மறுத்துவிட்டார்.
இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவது இது முதல்முறை அல்ல. ஜூன் மாதமும், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக வாக்குவாதம் செய்தனர். இதன் பிறகு, நெதன்யாகுவை டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்து பேட்டி கொடுத்தார்.
