இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்
UPDATED : ஆக 17, 2026 10:47 PM
ADDED : ஆக 17, 2026 08:31 PM

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அடங்குவதற்குள், இன்று அதே புளோரஸ் தீவில் 5.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால், தீவில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர்.
தெற்காசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தின் புளோரஸ் தீவுக்கு அருகே கடந்த 15ல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கட ல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதால் அருகில் உள்ள மாகாணங்களிலும் அதிர்வு உணரப்பட்டது.
இதைத்தொடர்ந்து அன்று மாலையே வடக்கு சுமத்ராவில் 6.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. புளோரஸ் தீவை உலுக்கிய இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், மங்கராய், கிழக்கு மங்கராய், சிக்கா, என்கடா, எண்டே உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
இந்தப் பேரிடரில் சிக்கி இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் புளோரஸ் தீவில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தீவில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர்.
