sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஒட்டுமொத்த அமைதியையும் இழந்த வங்கதேசம்: மேலும் ஒரு ஹிந்து அடித்துக் கொலை

/

ஒட்டுமொத்த அமைதியையும் இழந்த வங்கதேசம்: மேலும் ஒரு ஹிந்து அடித்துக் கொலை

ஒட்டுமொத்த அமைதியையும் இழந்த வங்கதேசம்: மேலும் ஒரு ஹிந்து அடித்துக் கொலை

ஒட்டுமொத்த அமைதியையும் இழந்த வங்கதேசம்: மேலும் ஒரு ஹிந்து அடித்துக் கொலை

19


ADDED : ஜன 10, 2026 04:59 PM

Google News

ADDED : ஜன 10, 2026 04:59 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து கொல்லப்பட்டு உள்ளார். அவரை அடித்து விஷம் வைத்து கொன்றுவிட்டதாகவும், இது திட்டமிட்ட கொலை என்றும் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீதான தாக்குதல் காரணமாக அங்கு தொடர்ந்த பதற்றமான சூழல் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 4 வாரங்களில் மட்டும் மொத்தம் 6 ஹிந்துக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

வங்கதேசத்தில் தற்போது அமைதியற்ற நிலைமை காணப்படும் நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக ஹிந்து நபர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். சுனம்கஞ்ச் மாவட்டம் பங்கடோஹோர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜாய் மகாபத்ரே தான் அந்த கொல்லப்பட்ட நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த வியாழன்று நிகழ்ந்ததாகவும், ஜாய் மகாபத்ரே உள்ளூரில் உள்ள கடை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரை அமிருல் இல்லாம் என்ற நபர் விஷம் வைத்து அடித்துக் கொன்றுவிட்டதாகவும் ஜாய் மகாபத்ரே குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது திட்டமிட்ட கொலை, எனவே உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். ஜாய் மகாபாத்ரே மரணத்தை தொடர்ந்து வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துகள் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us