அமெரிக்காவில் இன்னொரு அதிர்ச்சி; நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்; விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்
அமெரிக்காவில் இன்னொரு அதிர்ச்சி; நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்; விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்
UPDATED : செப் 20, 2024 11:16 AM
ADDED : செப் 20, 2024 11:12 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை போலீஸ்காரர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பெருகியுள்ள துப்பாக்கி கலாசாரத்தால், நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அங்குள்ள கென்டுகி மாகாணத்திற்குட்பட்ட மாவட்ட நீதிபதியாக இருந்தவர் கெவின் முல்லின்ஸ், 54. இவர் லெட்சர் கவுண்டி கோர்ட் அலுவலகத்தில், இவருக்கும், போலீஸ் அதிகாரி மிக்கே ஸ்டைன்ஸூக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவரும் பரஸ்பரமாக வாக்குவாதம் செய்த நிலையில், ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற போலீஸ் அதிகாரி மிக்கே ஸ்டைன்ஸ், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நீதிபதி கெவின் முல்லின்ஸை சுட்டுக்கொன்றார்.
தற்போது, போலீஸ் அதிகாரி மிக்கே ஸ்டைன்ஸை போலீசார் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் எதற்காக நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.