இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி; நீளம் தாண்டுதலில் ஆன்சி சோஜன் அசத்தல்
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி; நீளம் தாண்டுதலில் ஆன்சி சோஜன் அசத்தல்
ADDED : செப் 27, 2026 06:36 PM

அய்ச்சி - நகோயா: ஆசிய விளையாட்டு போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டின் நீளம் தாண்டுதலின் இறுதிச்சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், இந்தியாவின் ஆன்சி சோஜனுக்கும், சீனாவின் ஹூவான் யிங்யிங்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
ஆன்சி தன்னுடைய 5வது வாய்ப்பில் 6.53 மீட்டர் நீளம் தாண்டி முன்னிலை பெற்றிருந்தார். அப்போது, சீனாவின் யிங்யிங் 6.55 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஆன்சி சோஜனுக்கு வெள்ளி கிடைத்தது.
இதேபோட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ஷைலி ஷிங் வெண்கலப்பதக்கத்திற்கான வாய்ப்பை சீன வீராங்கனையிடம் தவற விட்டார். இன்று அவர் அதிகபட்சமாக 6.42 மீட்டர் நீளம் தாண்டிய நிலையில், சீன வீராங்கனை மேன்ஹி டன் 6.46 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலத்தை தட்டிச் சென்றார்.
இதேபோல, மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹரிதா பத்ரா, வெண்கலம் வென்றார். ஆடவர் டெக்கத்லான் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர், 7,934 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன்மூலம், இந்தியா இதுவரையில் 4 தங்கம், 15 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்றுள்ளது.
