sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது 37 பேர் பலி; 1,200 பேர் கைது

/

 ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது 37 பேர் பலி; 1,200 பேர் கைது

 ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது 37 பேர் பலி; 1,200 பேர் கைது

 ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது 37 பேர் பலி; 1,200 பேர் கைது

1


ADDED : ஜன 08, 2026 01:01 AM

Google News

ADDED : ஜன 08, 2026 01:01 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில், 37 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்காசிய நாடான ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று வரலாறு காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பும் சரிந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தலைநகர் டெஹ்ரானில் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டம், இப்போது உச்ச தலைவர் கமேனி ஆட்சிக்கு எதிரானதாக மாறி, நாடு முழுதும் பரவியுள்ளது.

கமேனிக்கு எதிராக முழக்கமிட்டு ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். குறிப்பாக, தலைநகர் டெஹ்ரானின் பிரதான வணிக மையமான கிராண்ட் பஜாரில், நேற்று கடும் மோதல் வெடித்தது. வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால், பஜார் முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது; பலர் காயமடைந்தனர்.

கடந்த, 10 நாட்களாக நடக்கும் போராட்டங்களில், இரண்டு போலீசார் உட்பட 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us